ஆப்நகரம்

எல்லாருக்கும் ரீசார்ஜ் இலவசம்.. மோடி அரசு அறிவிப்பு? இது உண்மையா?

அனைவருக்கும் 239 ரூபாய்க்கு ரீசார்ஜ் இலவசமாக வழங்கும் திட்டத்தை நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளதா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 15 May 2023, 3:58 pm
இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை மொபைல் போன்களின் பயன்பாடு மிகவும் பொதுவானதாகிவிட்டது. மக்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில், தொலைபேசிக்கான ரீசார்ஜ் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் நிறையப் பேர் இரண்டு மூன்று சிம் கார்டுகள் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது ரீசார்ஜ் செலவுகள் அதிகரித்துவிட்டதால் ஒரே ஒரு சிம் கார்டு போதும் என்ற முடிவுக்கு நிறையப் பேர் வந்துவிட்டனர்.
Samayam Tamil free recharge



ஒவ்வொரு மாதமும் மக்கள் தங்கள் மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய சுமார் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், ஒரு செய்தி மிகவும் வைரலாகி வருகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மூலம் இந்தியர்களுக்கு இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு வருகிறது.

வைரஸ் செய்தி!


சமூக வலைதளங்களில் பல செய்திகள் வைரலாகி வருகின்றன. இவற்றில், பல போலி செய்திகளும் வைரலாகின்றன. குறிப்பாக வாட்ஸ் ஆப் போன்ற தளங்களில் போலியான செய்திகள் அதிகமாகப் பரப்பப்படுகின்றன. இதன் மூலம் வதந்திகளைப் பரப்பி மக்களை ஏமாற்றி பணத்தைத் திருடும் மோசடி வேலையும் நடக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மை சரிபார்ப்பு சோதனை PIB Fact Check மூலம் செய்யப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் இலவசம்!

தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தியில், '2024 தேர்தலில் அதிக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவும், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்களுக்கு ரூ. 239 ரீசார்ஜ் இலவசமாக வழங்குகிறார் ' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்த செய்தியில் ஒரு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போலியான செய்தி!


PIB Fact Check மூலம் இந்த செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கூற்று போலியானது என்று PIB Fact Check மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ரீசார்ஜ் திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மோசடி முயற்சியாகும். அத்தகைய சூழ்நிலையில், தெரியாத எந்த செய்தியிலும் கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்