ஆப்நகரம்

பென்சனுக்கு வருமான வரி உண்டா? சீனியர் சிட்டிசன்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பென்சன் மற்றும் குடும்ப பென்சன் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுமா?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Feb 2023, 2:02 pm
சீனியர் சிட்டிசன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும் வருமான வரி சலுகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்ததற்காகவும், வரி செலுத்தி வந்ததற்காகவும் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil is pension and family pension income taxable in india what does law suggest for senior citizen
பென்சனுக்கு வருமான வரி உண்டா? சீனியர் சிட்டிசன்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!


சீனியர் சிட்டிசன்களுக்கு வருமான வரி விகிதம்

60 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரி இல்லை. 3 லட்சம் மேல் 5 லட்சம் ரூபாய் வரை 5%, 5 லட்சம் ரூபாய் மேல் 10 லட்சம் ரூபாய் வரை 10,000 ரூபாயும் 20% வரி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 1,10,000 ரூபாயும் 30% வரியும் விதிக்கப்படும்.

மிக சீனியர் சிட்டிசன்களுக்கு

80 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 5 லட்சம் மேல் 10 லட்சம் ரூபாய் வரை 20% வரி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 1 லட்சம் ரூபாயும், 30% வரியும் விதிக்கப்படும்.

பென்சனுக்கு வரி உண்டா?

பணி ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்களுக்கான பென்சன் தொகை வருமான வரி வரம்புக்கு மீறி இருந்தால் அதற்கு உரிய விகிதத்தில் வருமான வரி விதிக்கப்படும்.

PF தொகைக்கு வரி உண்டா?

அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) தொகைக்கு வரி கிடையாது. அரசு சாரா ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்திருந்தால் PF தொகைக்கு வரி விதிக்கப்படாது.

கிராஜுவிட்டிக்கு வரி உண்டா?

அரசு ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி (Gratuity) தொகைக்கு வருமான வரி கிடையாது.

குடும்ப ஓய்வூதியத்துக்கு வரி உண்டா?

குடும்ப ஓய்வூதிய தொகைக்கும் வருமான வரி உண்டு. 'Income from other sources’ என்ற பிரிவின் கீழ் குடும்ப ஓய்வூதியம் வருமானமாக கருதப்படும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்