ஆப்நகரம்

வருமான வரி: கால அவகாசம் நீட்டிப்பு... ஹேப்பி நியூஸ்!

கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 7:50 pm
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். வரி செலுத்துவது, வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பது போன்றவற்றிலும் சிக்கல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தற்போதைய அறிவிப்பில் வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil itr


வருமான வரித் துறையின் சட்ட திட்டங்களின் படி, தனிநபர்கள் தங்களது ஐடிஆர்-1, ஐடிஆர்-4 வரி ரிட்டன்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேபோல, நிறுவனங்கள் தங்களது வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வரித் தாக்கலுக்கான கடைசித் தேதி நீட்டிக்கப்படுவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பென்சன் வேணுமா? உடனே இதில் சேருங்க!
புதிய அறிவிப்பின்படி, 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியை தனிநபர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேபோல, நிறுவனங்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வரித் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் நிம்மதியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்