ஆப்நகரம்

IT ஊழியர்களுக்கு தொடரும் கருப்பு பக்கம்.. சம்பளம் உயர்வெல்லாம் இனி இல்லை!

இந்தியாவில் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் ஐடி துறைகளில் சம்பள உயர்வு விகிதம் குறைவாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 30 Mar 2023, 4:05 pm
கோவிட்-19 காலத்தில் எல்லா தொழில்துறைகளும் சம்பளத்தை குறைத்து கொடுத்து வந்த நிலையில் ஐடி துறை ஊழியர்கள் டபுள் டிஜிட் சம்பளம் விகிதம் பெற்று சிறப்பாக இருந்தனர் என்பதுதான் உண்மை.
Samayam Tamil Salary hike


ஆனால் கோவிட்-19 தொற்று எல்லாம் விலகி, இன்று பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் அதிகப்படியான வேலை பறிப்புகளுக்கும் ஆளானதும் ஐடி ஊழியர்கள்தான்.

இந்நிலையில் பணிநீக்கம் அறிவிப்புகளே இன்னும் முடியாத நிலையில் ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விகிதம் என்றும் இல்லாத அளவிற்கு குறையும் என Delotte India's India Talent Outlook 2023 இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்கள் சம்பள உயர்வு கடந்த ஆண்டின் 9.4 சதவீதத்திலிருந்து IT பிரிவில் 9.1 சதவீத ஆக குறைய வாய்ப்புள்ளதாக டெலாய்ட் இந்தியா ஆய்வறிக்கைகள் கூறுகின்றனர்.

ஐடி துறை மட்டுமின்றி இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு விகிதம் குறையலாம் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

25 துறைகளில் உள்ள 300 நிறுவனங்களின் மனிதவளத் தலைவர்களிடம் இருந்து பெரும்பாலும் தரவுகளை சேகரித்த டெலாய்ட் ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டில் லைஃப் சயின்ஸ் மற்றும் உற்பத்தித் துறைகள் மிக உயர்ந்த சம்பள உயர்வை (9.5%) காணும் என தெரிவித்துள்ளது.

இன்னும் பொருளாதார மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாத நிலையிலும், ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகிதங்கள், பொருளாதார மந்தநிலை அச்சம், பிரபல நிறுவனங்கள் தொடர் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஐடி துறையினர் சம்பள உயர்வு குறித்த இந்த அறிக்கை ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தி எனவே கூறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்