ஆப்நகரம்

ஜன் தன்: ரூ.2 லட்சம் காப்பீடு... மத்திய அரசு அறிவிப்பு!

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கும் இனி காப்பீடு கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2020, 7:20 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் நலத்திட்ட நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil insurance


தற்போதைய கொரோனா காலத்தில் மோசமான உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. யாருக்கு என்ன நடக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத சூழலில், இந்த நேரத்தில் மக்களுக்கு முடிந்தவரை அரசாங்கம் உதவி வருகிறது. சமீபத்தில், மத்திய நிதியமைச்சகம் காப்பீட்டு வசதி தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விரைவில் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு வழங்கப்படவுள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களும் ஜான் தன் யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டு காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Personal Loan: எந்த வங்கி பெஸ்ட் சாய்ஸ்?

சமீபத்தில் நடைபெற்ற ஜன் தன் யோஜனாவின் 6ஆவது ஆண்டு விழாவில் நிதியமைச்சகம் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் ரூ.330 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெற முடியும். இந்த வசதி அனைத்து ஜன் தன் யோஜனா திட்டப் பயனாளிகளுக்கும் அதனுடன் இணைக்கப்படும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

தொழில் தொடங்கப் போறீங்களா? ரூ.10 லட்சம் வரையில் அரசாங்கக் கடன்!

ஜன் தன் யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பிறகு கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இதற்கான பிரீமியம் தொகை பயனாளியின் கணக்கிலிருந்து நேரடியாப் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா போன்ற பேராபத்து காலத்தில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்