ஆப்நகரம்

முகூர்த்தம், கார்த்திகை தீபம் எதிரொலி.. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

சுப முகூர்த்தம் மற்றும் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Dec 2022, 5:09 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
Samayam Tamil flower market
flower market


இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரூந்தும் ஈரோடு பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

தற்போது கடும் பனி நிலவி வரவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வருகிறது. மேலும் தற்போது கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த நாள், கார்த்திகை தீபம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

ஷாப்பிங்.. உணவுகள்.. செலவுகளுக்கு குட்பை.. பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்!
பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அதிகபட்சமாக ஒரூ கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் முல்லைப் பூ கிலோ 2000 ரூபாய்க்கும், காக்கட்டான் பூ கிலோ 800 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ கிலோ 120 ரூபாய்க்கும், அரளி பூ கிலோ 300 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் துளசி, மரிக்கொழுந்து, ரோஜா ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்