ஆப்நகரம்

ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நகைத் தொழிலாளர்கள் கோரிக்கை!

ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் நகைத் தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது.

Samayam Tamil 29 Sep 2022, 11:55 am
கன்னியாகுமரி மாவட்ட நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவையின் 34வது ஆண்டு விழா மற்றும் ஒன்பதாவது மாநாடு இன்று நாகர்கோவில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இயந்திரமயத்தின் ஆதிக்கத்தால் நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஜிஎஸ்டி வரியை மூன்றிலிருந்து ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil jewels


மேலும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த நகை தொழிலாளர்களுக்கு பணப் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகை தொழிலில் எந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நகை தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


குறிப்பாக, ஜிஎஸ்டி மூன்று சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் கவர்ச்சி விளம்பரங்களால் சிறிய தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு நகை தொழிலாளர்களுக்கு அவர்களது தொழில் வளர்ச்சிக்காக வங்கிகள் மூலம் கடனுதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

பொற்கொல்லர் நல வாரியத்தில் பதிவு செய்த நகை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அரசு உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்