ஆப்நகரம்

பெட்ரோல் விலை தள்ளுபடி.. ஆதார் கார்டு இருந்தா போதும்!

பெட்ரோல் விலையில் 25 ரூபாய் தள்ளுபடி பெறுவதற்கு ஆதார் கார்டு இருந்தால் போதும்.

Samayam Tamil 20 Jan 2022, 2:31 pm
ஜார்கண்ட் மாநிலத்தில் தள்ளுபடி விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெள்ளியிட்டது. இதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பெட்ரோல், டீசல் விலையில் 25 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
Samayam Tamil fuel


இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மாதத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என ஜார்கண்ட் அரசு தற்போது தெரிவித்துள்ளது. இதற்காக ஜார்கண்ட் அரசு தனி மொபைல் ஆப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் ஹாசன், “இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் மானியம் என்ற வீதம் மாதம் அதிகபட்சம் 10 லிட்டர் வரை பெட்ரோல் வாங்க ஆதார் கார்டு அவசியம். லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரை பெட்ரோல் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கம்மி ரேட்டில் வீடு, சொத்து அள்ளிட்டு போங்க.. சூப்பர் வாய்ப்பு!
குடியரசு தினம் முதல் மானிய விலையில் பெட்ரோல் விற்பனை ஜார்கண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கடும் சுமையை சந்தித்து வருகின்றனர். இந்த சுமையில் இருந்து எளிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மானியம் வழங்க ஜார்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்