ஆப்நகரம்

Andrew formica: பீச்சுக்கு போய் சும்மா உக்கார போறேன்.. CEO பதவியை ராஜினாமா செய்தவர் முடிவு!

CEO பதவியை ராஜினாமா செய்துவிட்டு பீச்சுக்கு போய் சும்மா உட்காரப் போவதாக ஜுபிடர் ஃபண்ட் நிறுவனத் தலைவர் ஆண்ட்ரூ ஃபார்மிகா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2022, 1:38 pm
லண்டனை சேர்ந்த சொத்து நிர்வாக நிறுவனமான ஜுபிடர் ஃபண்ட் மேனேஜ்மண்ட் (Jupiter Fund Management) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் (CEO), இயக்குநராகவும் ஆண்ட்ரூ ஃபார்மிகா (Andrew Formica) பதவி வகித்து வந்தார்.
Samayam Tamil Andrew Formica


ஜுபிடர் ஃபண்ட் நிறுவனத்தின் மதிப்பு 6790 கோடி டாலர். ஜுபிடர் ஃபண்ட் நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டில் தலைமை நிர்வாகியாக ஆண்ட்ரூ ஃபார்மிகா இணைந்தார். இந்நிலையில், தற்போது தலைமை பதவியை ராஜினாமா செய்வதாக ஆண்ட்ரூ ஃபார்மிகா தடாலடியாக அறிவித்துள்ளார்.

இதன்படி ஜுபிடர் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி ஆண்ட்ரூ ஃபார்மிகா விலகுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பின் மேத்தியூ பீஸ்லே (Mathew Beesley) தலைமை பதவியை ஏற்பார்.

Layoffs: உள்ளூர் முதல் உலக லெவல் வரை.. ஊழியர்களை நீக்கும் நிறுவனங்கள்!
சொந்த காரணங்களுக்காக பணியில் இருந்து விலகுவதாகவும், பெற்றோருடன் சேர்ந்து இருக்கப்போவதாகவும் ஆண்ட்ரூ ஃபார்மிகா தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில், பீச்சுக்கு சென்று சும்மா அமர்ந்து இருக்கப்போவதாகவும், வேறு எந்தவொரு சிந்தனையும் இல்லை எனவும் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்