ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக அரசு அம்மாநில அரசு ஊழியர்களுக்கான 7 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

Samayam Tamil 18 Feb 2023, 12:08 pm
கர்நாடக அரசு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்துவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பெசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 7th pay Commission


மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு 7வது ஊதியக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினை வந்த பிறகு 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. வரி வருவாய் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் அகவிலைப்படி உயர்வு வழங்க முடியாமல் போனதோடு அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தற்போது இயல்பு நிலை திரும்பி அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுகிறது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.

2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு, செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் கூடுதல் தொகை துணை பட்ஜெட்டில் வழங்கப்படும் என்றும், மேலும் 2023-24 நிதியாண்டு முதல் 7வது ஊதியக் குழுவின் அறிக்கைகள் அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊதியக்குழு அதன் இடைக்கால அல்லது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தாலும், மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், பட்ஜெட்டில் மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்