ஆப்நகரம்

Karur Vyasya Bank Q4 Results: கரூர் வைஸ்யா வங்கியின் லாபம் 58% உயர்வு!

கடந்த மார்ச் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் லாபம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 May 2023, 3:24 pm
தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. காலாண்டை பொறுத்தவரை மார்ச் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 58.7% அதிகரித்து 338 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil kvb
kvb


கடந்த 2023ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் - மார்ச்) 12 மாதங்களில் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 64% உயர்ந்து 1106 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்த வர்த்தகம் முந்தைய ஆண்டை விட 12.3% அதிகரித்துள்ளதாகவும், முந்தைய காலாண்டை விட 2% உயர்ந்துள்ளதாகவும் கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது. டெபாசிட்டுகள் 11.9% உயர்ந்துள்ளன. CASA 6.5% அதிகரித்துள்ளது.

இருப்புநிலை (Balance sheet):

2023 மார்ச் 31 அன்று கரூர் வய்ஸ்யா வங்கியின் இருப்பு நிலை ₹ 90,179 கோடியாக பதிவாகியிருக்கிறது. 2022 மார்ச் 31 அன்று 80,071 கோடி ரூபாய் என்பதுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி 12.6% ஆகும்.

கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 64.3% என்ற வலுவான வளர்ச்சியை பதிவு செய் 1106 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது..

முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுக்கான PPOP 51.9% உயர்ந்து, ₹ 2,476 கோடியாக பதிவாகியிருக்கிறது.

நிகர வட்டி வருமானம் (NII), கடந்த நிதியாண்டில் 23.3% அதிகரித்து ₹ 3,349 கோடியாக உயர்ந்திருக்கிறது.

டெபாசிட்களுக்கான செலவு 0.04%s முன்னேற்றம் கண்டு 4.27% ஆக உயர்ந்துள்ளது.

கமிஷன் மற்றும் கட்டணம் வாயிலான வருவாய் 17.8% அதிகரித்து 747 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இயக்க செலவுகள் 2032 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2023 மார்ச் 31 நிலவரப்படி கரூர் வைஸ்யா வங்கியிடம் 799 கிளைகள் மற்றும் 2240 ஏடிஎம்கள் / கேஷ் ரீசைக்கிளர்கள் என்ற அளவை எட்டியிருந்தன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்