ஆப்நகரம்

உமாங் ஆப்பை ஆதாருடன் லிங்க் பண்ணியாச்சா? ஈசி வழி இதோ...

உமாங் ஆப்பில் ஆதாரை இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 29 Jul 2021, 5:14 pm
முன்பெல்லாம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதார்கள் தங்களது பிஎஃப் விவரங்களைச் சரிபார்க்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். அந்த சிரமத்தைக் குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து உமாங் (UMANG) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இச்செயலில் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, பிஎஃப் கிளைம், தகவல் மாற்றங்கள் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும். ஈபிஎஃப்ஓவின் 16 விதமான சேவைகளை உமாங் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.
Samayam Tamil umang


இந்த உமாங் ஆப்பில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். அவ்வாறு இணைக்காமல் இருந்தால் பிஎஃப் சேவைகளைத் தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும். உமாங் ஆப்பில் ஆதாரை இணைப்பது சுலபமான ஒன்றுதான்.

கூகுள் பே மோசடி... உடனே இதைச் செய்தால் பணம் கிடைக்கும்!
உமாங் ஆப் ஓப்பன் செய்து அதில் New User என்ற வசதியில் செல்ல வேண்டும். உடனே ‘Select Registration Mode’ என்ற ஆப்சன் வரும். அதில் Aadhaar number என்பதை கிளிக் செய்ய வேண்டும். புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். பின்னர் டேர்ம்ஸ் & கண்டிசன்களுக்கு ஓகே கொடுத்து submit செய்ய வேண்டும். உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை வைத்து ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்