ஆப்நகரம்

தேசிய பென்சன் திட்டம்: ஆன்லைனில் கணக்கு திறப்பது எப்படி?

ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாக தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு தொடங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 7 Dec 2020, 4:55 pm
என்.பி.எஸ். அல்லது தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு கட்டாயம்.
Samayam Tamil nps


ஆன்லைன் மூலமாக இத்திட்டத்தில் கணக்கு தொடங்குவது எப்படி?

>> enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற eNPS இணையதளத்தில் சென்று நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

>> மொபைல் எண், ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

>> உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதைப் பதிவிட வேண்டும்.

>> அதன் பின்னர் உங்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) ஒதுக்கப்படும். அதை வைத்துத்தான் நீங்கள் தேசிய பென்சன் கணக்கில் லாகின் செய்ய முடியும்.

>> 'eSign' வசதியைப் பயன்படுத்தி நீங்கள் PRAN எண்ணை வைத்து உள்நுழைய வேண்டும். இதற்கும் ஓடிபி அனுப்பப்படும்.

>> ஆதார் இணைப்புக்குப் பிறகு உங்களது விண்ணப்பம் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைன் இன் ஆகிவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்