ஆப்நகரம்

பென்சன் விதிகள் மாற்றம்... மத்திய அரசு அறிவிப்பு!

பென்சனர்களின் மகள் கணவனை இழந்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ அவர்களுக்கு குடும்ப பென்சன் வழங்குவது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2021, 6:25 pm
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய பென்சன் மற்றும் பென்சனர்கள் நல அமைப்பு 75 அம்சங்கள் அடங்கிய பென்சன் விதிமுறைகள் குறித்து அப்டேட் செய்திருந்தது. அதில் பென்சன் பெறுவோருக்கான விதவை மகள் மற்றும் விவாகரத்து பெற்ற மகளுக்கான பென்சன் விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தன.
Samayam Tamil pension


விதிமுறைப்படி, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள் குடும்ப பென்சனை வாங்கலாம். ஆனால் இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஓய்வூதியம் பெறும் நபர் தனது மகள் விதவை அல்லது விவாகரத்து பெற்றவர் என்பதை பென்சன் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப பென்சன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது. அதேபோல, பென்சன் பெறும் நபர் இறந்துவிட்டால் அவரது மனைவி/கணவன் இந்த விதிமுறைக்கு உட்பட வேண்டும்.

விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப பென்சன் கிடைப்பதற்கு அவரது கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ அப்பெண்ணின் பெற்றோரில் ஒருவர் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கிடைக்கும். ஒருவேளை அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறுவதற்கான வழக்கு தொடரப்பட்டு, பெற்றோர் இறந்தபிறகு விவாகரத்து கிடைத்தால் அப்பெண்ணுக்கு குடும்ப பென்சன் கிடைக்கும்.

5000 ரூபாய் பென்சன்... எந்த வயதில் எவ்வளவு சேமிக்கணும்?
அதாவது, பெற்றோர் இறந்தபிறகு விவாகரத்து கிடைத்திருந்தாலும் அதற்கான விண்ணப்பம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது தாக்கல் செய்யப்பட்டிருந்தால் செல்லுபடியாகும். இதுபோன்ற சூழலில், குடும்ப பென்சனானது விவாகரத்து பெற்ற தேதியிலிருந்து மட்டுமே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்