ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள கணக்கு.. அடேங்கப்பா இவ்வளவு சலுகைகளா!

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் சம்பள கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது கோட்டக் மஹிந்த்ரா வங்கி.

Samayam Tamil 14 Jun 2022, 5:51 pm
அரசு ஊழியர்களுக்காகவே பிரத்யேகமான சம்பள கணக்கை (Salary Account) கோட்டக் மஹிந்த்ரா வங்கி (Kotak Mahindra Bank) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சம்பளக் கணக்கின் பெயர் கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சேலரி அக்கவுண்ட் (Kotak NationBuilders Salary Account).
Samayam Tamil govt employees


மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் இந்த கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சம்பளக் கணக்கை தொடங்கிக்கொள்ளலாம். இந்த சம்பளக் கணக்கில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.

இதுவொரு வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது, கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சம்பள கணக்கு வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கத் தேவையில்லை.

சர்வீஸ் சார்ஜ் இல்லாத இலவச லாக்கர் வசதி உண்டு. மாதம் 2 லட்சம் ரூபாய் வரை இலவசமாக டெபாசிட் செய்துகொள்ளலாம். மாதத்துக்கு 30 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலால்ம்.

கணக்குதாரர்களுக்கு இலவச ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (Rupay Platinum Debit Card) வசதி உண்டு. மேலும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கூடுதல் டெபிட் கார்டு வழங்கப்படும்.

பென்சன் பயனாளிகளுக்கு புதிய வசதி.. இனி ரொம்ப ஈசி!
மற்ற அம்சங்கள்:

  • 50 லட்சம் ரூபாய் வரை தனிநபர் விபத்துக் காப்பீடு

  • சாலை மற்றும் ரயில் விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு

  • குறிப்பிட்ட இந்திய பிராண்டுகளின் பொருட்களை வாங்கும்போது 5% கேஷ்பேக் சலுகை

  • உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் Lounge பயன்படுத்த அனுமதி.

  • குழந்தைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன். இந்த கடனுக்கு வட்டி சலுகை உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்