ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு மெகா ஷாக்.. இனி அதிக EMI கட்டணும்!

எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளது - வாடிக்கையாளர்களுக்கு ஈஎம்ஐ உயரும்.

Samayam Tamil 2 Oct 2022, 1:08 pm
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.90% ஆக உயர்த்தியுள்ளதாக செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
Samayam Tamil SBI


இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதங்கள் உயர்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வீட்டுக் கடன், கார் கடன், இருசக்கர வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான EMI தொகை உயரும். கடன் வாங்கியோருக்கு சுமை அதிகரிக்கும்.

தீபாவளி ஷாப்பிங் பண்ண பணமில்லையா? அட பணமே இல்லாமல் வாங்கிட்டு போங்க!
ஏற்கெனவே கடன் வாங்கி EMI செலுத்துபவர்கள், புதிதாக கடன் வாங்குபவர்கள் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுவார்கள். வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் இதே போல கடன் வட்டி விகிதங்களை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் இன்னும் அதிகமாகவே நீடித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7% ஆக இருந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இரண்டாவது அரையாண்டிலும் பணவீக்கம் தொடர்ந்து 6% அளவில் உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்