ஆப்நகரம்

HDFC Bank Q3: எதிர்பார்ப்பை தாண்டிய லாபம்.. குஷியில் எச்டிஎஃப்சி பேங்க் பங்குதாரர்கள்!

டிசம்பர் காலாண்டில் எதிர்பார்ப்புகளை தாண்டி லாபம் சம்பாதித்த எச்டிஎஃப்சி வங்கி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 15 Jan 2023, 10:26 am
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வருமான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்பார்ப்புகளை தாண்டிய வருமானத்தை டிசம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ஈட்டியுள்ளது.
Samayam Tamil HDFC bank
HDFC bank


எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள வருமான விவரங்களின்படி, டிசம்பர் காலாண்டில் 12,259.5 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் லாபம் 18.5% உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் (Net Interest Income) 24.6% அதிகரித்து 22,987.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிகர வட்டி வருமானம் என்பது, வங்கி ஈட்டிய வட்டி வருமானத்துக்கும், செலுத்திய வட்டித் தொகைக்கும் இடையேயான வேறுபாடு ஆகும். டிசம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கியின் லாபம், நிகர வட்டி வருமானம் இரண்டுமே எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்துள்ளது.

Infosys Q3: எதிர்பார்ப்பை தாண்டிய லாபம்.. கெத்து காட்டிய இன்ஃபோசிஸ்!
டிசம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி 11,900 கோடி ரூபாய் லாபத்தையும், 22,500 கோடி ரூபாய் வருவாயையும் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்ப்புகளை தாண்டிய வருமானத்தை பெற்றுள்ளதால் எச்டிஎஃப்சி வங்கி பங்குதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எச்டிஎஃப்சி வங்கியின் Net interest margin 4.1% உயர்ந்துள்ளது. வாராக் கடன்களின் விகிதம் 0.33% என எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. ஒட்டுமொத்த டெபாசிட் 19.9% உயர்ந்து 17,33,204 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு டெபாசிட்டுகள் 12% அதிகரித்துள்ளன. சேமிப்பு கணக்கு டெபாசிட் 5,35,206 கோடி ரூபாயாகவும், நடப்பு கணக்கு டெபாசிட் 2,27,745 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மொத்த பேலன்ஸ் ஷீட் 18.4% அதிகரித்து 22,95,305 கோடி ரூபாயாக உயர்ந்துளது.

தற்போது எச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை 1601 ரூபாயாக உள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்