ஆப்நகரம்

பென்சனர்களுக்கு கடைசி வாய்ப்பு.. இப்போவே முடிச்சிடுங்க!

வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க பென்சன் வாங்குவோருக்கு கடைசி வாய்ப்பு.

Samayam Tamil 25 Dec 2021, 5:38 pm
பென்சன் வாங்குவோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்வுச் சான்றிதழை (life certificate) தாக்கல் செய்ய வேண்டும். வாழ்வுச் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று.
Samayam Tamil pension


ஆக, பென்சன் வாங்கும் நபர்கள் தொடர்ந்து பென்சன் பெற வேண்டுமெனில் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்வுச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். எனினும், பென்சனர்களின் நலன் கருதி இந்த ஆண்டு வாழ்வுச் சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இதுவரை வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு இன்னும் 6 நாட்கள் கால அவகாசம் உள்ளது. வாழ்வுச் சான்றிதழை எப்படி ஈசியாக தாக்கல் செய்வது?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: புத்தாண்டு ஹேப்பி நியூஸ் வந்தாச்சு!
* நேரடியாக வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்துக்கு சென்று வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

* டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் (Digital life certificate) சமர்ப்பிக்கலாம்.

* பல்வேறு வங்கிகள் வீட்டுக்கே வந்து வாழ்வுச் சான்றிதழை பெற்றுக்கொள்கின்றன. இச்சேவையை பயன்படுத்தலாம்.

* எஸ்பிஐ (SBI) வங்கி வீடியோ வாழ்வுச் சான்றிதழ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்