ஆப்நகரம்

FD: முடிவுக்கு வரும் ஸ்பெஷல் டெபாசிட் திட்டம்.. அதிக வட்டி வேணுமா? உடனே பணத்தை போடுங்க!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி வாய்ப்பு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Dec 2022, 11:22 am
பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கி அண்மையில் ‘பரோடா திரங்கா டெபாசிட் திட்டம்’ (Baroda Tiranga Deposit Scheme) என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் 444 நாட்கள் மற்றும் 555 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil Bank of Baroda FD
Bank of Baroda FD


தற்போது இத்திட்டத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.50% வட்டி வழங்குகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் 0.50% வட்டியும் அடங்கும். எனினும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது.

இந்த சிறப்பு டெபாசிட் திட்டம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதிக வட்டி வாயிலாக பலன் பெற விரும்புவோர் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். தற்போது பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஆன்லையிலேயே Bob World மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக முதலீடு செய்யலாம்.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் நேற்று (டிசம்பர் 26) முதல் உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு புதிய வட்டி விகிதம் பொருந்தும்.

IDBI FD: ஐடிபிஐ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்.. ஸ்பெஷல் வட்டி கிடைக்கும்!
புதிய வட்டி

211 - 270 நாட்கள் : 5.75%

271 - 364 நாட்கள் : 5.75%

1 ஆண்டு : 6.75%

1 ஆண்டு - 400 நாட்கள் : 6.75%

400 நாட்கள் - 2 ஆண்டு : 6.75%

2 ஆண்டு - 3 ஆண்டு : 6.75%

444 நாட்கள் : 6.75%

555 நாட்கள் : 6.75%

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்