ஆப்நகரம்

வீட்டுக் கடன்... இன்றே கடைசி நாள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வீட்டுக் கடன் சிறப்புச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது.

Samayam Tamil 31 Aug 2021, 4:15 pm
தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். சிலருக்கு இதுவே வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். சொந்தமாக ஒரு வீடு கட்டுவது சாதாரண விஷயம் அல்ல. வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டுமே வீடு கட்டிவிட முடியாது. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு வங்கிகள் தரப்பிலிருந்து வீட்டுக் கடன் வழங்கப்படுகின்றன. வீடு கட்ட நினைப்பவர்களுக்காக சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil home loan


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ’மன்சூன் தமாக்கா ஆஃபர்’ என்ற பெயரில் சிறப்புக் கடன் திட்டத்தை சென்ற மாதம் அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களுக்கான செயல்பாட்டுக் கட்டணம் முழுவதும் ரத்துசெய்யப்பட்டது. இச்சலுகை குறுகிய காலம் மட்டுமே. அதாவது ஆகஸ்ட் 31 வரை மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. அதன்படி இன்றோடு இச்சலுகை முடிவடைகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.70 சதவீதமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் ஒருவேளை எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கூடுதலாக 0.50 சதவீதம் சலுகை கிடைக்கும். அதேபோல, பெண்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு 0.50 சதவீத சலுகை கிடைக்கும்.

கார் லோன் வாங்க ஆஃபர்... நகைக் கடனுக்கும் கம்மி வட்டி... சூப்பர் சலுகை!
முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கார் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. இச்சலுகைத் திட்டத்தில் கார் வாங்கும்போது அதற்கான முழுத் தொகையில் சுமார் 75 சதவீதத்தை கடனாக வாங்கிக் கொள்ளலாம். யோனோ ஆப் மூலமாக கார் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால் 7.5 சதவீத வட்டியில் கார் கடன் கிடைக்கும். நகைக் கடன் வாங்க விரும்புபவர்களுக்கும் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக் கடனுக்கான வட்டியில் 0.75 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்