ஆப்நகரம்

ஆப்பிள் தான் எங்களோட சிறந்த பிசினஸ்.. வாரன் பஃபெட் புகழாரம்!

ஆப்பிள்தான் தங்களது முதலீடுகளில் சிறந்த நிறுவனம் என வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 May 2023, 7:28 pm
ஆப்பிள் நிறுவனம்தான் தனது முதலீட்டில் உள்ள நிறுனங்களில் சிறந்த நிறுவனம் என பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் (Warren Buffett) தெரிவித்துள்ளார்.
Samayam Tamil warren buffett
warren buffett


முதலீட்டாளர் வாரன் பஃபெட் உலகம் முழுவதும் உள்ள பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக இருக்கிறார். எனவே, வாரன் பஃபெட்டின் கருத்துகள் மற்றும் அவரது பெர்க்‌ஷயர் ஹாத்வே (Berkshire Hathway) நிறுவனத்தின் ஆண்டு கூட்டங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிப்பதுண்டு.

அவ்வகையில், நேற்று (மே 6) பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் ஒமாஹா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபெட், துணைத் தலைவர் சார்லி மங்கர் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்றனர்.

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனம் கோக்க கோலா, ஆப்பிள், செவ்ரான் உள்பட பல்வேறு பெரும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், பெர்க்‌ஷயர் ஹாத்வே முதலீடு செய்த நிறுவனங்களிலேயே ஆப்பிள் நிறுவனம்தான் சிறந்த நிறுவனம் என வாரன் பஃபெட் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

கடந்த மார்ச் நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வே 151 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதாவது, பெர்க்‌ஷயர் ஹாத்வே தனது மொத்த பங்கு முதலீடுகளில் (328 பில்லியன் டாலர்) 46 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்துள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வேக்கு 5.6% பங்கு இருக்கிறது. இன்னும் நிறைய ஆப்பிள் பங்குகளை வாங்கப்போவதாக வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அவர் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்கை தொடர்ந்து பாராட்டி வருகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தை ஒரு டெக்னாலஜி நிறுவனமாக பார்க்கவில்லை எனவும், அதை ஒரு நுகர்வோர் பொருள் நிறுவனமாக மட்டுமே பார்ப்பதாகவும், மக்கள் ஐபோன் (iPhone) வாங்குவதற்கு விரும்புகின்றார் எனவும் வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்