ஆப்நகரம்

என்டிபிசி.,யில் கொண்டுள்ள பங்குகளை அதிகரித்தது எல்ஐசி

பொதுத்துறையை சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தில் நிர்வகித்து வரும் பங்குகளின் அளவை 12.98% ஆக, எல்ஐசி நிறுவனம் அதிகரித்துக் கொண்டுள்ளது.

TOI Contributor 27 Feb 2016, 1:37 pm
பொதுத்துறையை சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தில் நிர்வகித்து வரும் பங்குகளின் அளவை 12.98% ஆக, எல்ஐசி நிறுவனம் அதிகரித்துக் கொண்டுள்ளது.
Samayam Tamil lic buys nearly 60 of ntpc shares on offer ups stake to 12 98
என்டிபிசி.,யில் கொண்டுள்ள பங்குகளை அதிகரித்தது எல்ஐசி

எல்ஐசி எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பொதுத்துறையை சேர்ந்ததாகும். இந்நிறுவனம், தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை, பங்கு வர்த்தகம்,மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறது.

இதன்படி, சக பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி.,யில், மேலும் 2.95% பங்குகளை,எல்ஐசி தற்போது வாங்கியுள்ளது. இதன்மூலமாக, அந்நிறுவனத்தில் எல்ஐசி கொண்டுள்ள பங்குகளின் அளவு 12.98% ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் என்டிபிசி.,யில் இருந்து 5% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் என்ற முறையில், மத்திய அரசு விற்பனை செய்தது. அதில், 60 சதவீதப் பங்குகளை, ரூ.5,030 கோடிக்கு, எல்ஐசி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்