ஆப்நகரம்

வீட்டுக் கடன் வட்டி உயர்வு.. எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2022, 9:30 am
வீட்டுக் கடன்களை வழங்கி வரும் நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil lic hfl


இப்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8% முதல் தொடங்குகிறது. இதற்கு முன் ஆரம்ப வட்டி விகிதம் 7.50% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நபரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும்.

உதாரணமாக, சிபில் ஸ்கோர் (CIBIL Score) 800க்கு மேல் இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8% கடன் விதிக்கிறது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்.

சிபில் ஸ்கோர் 750க்கும் 799க்கும் இடையே இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8.05% வட்டி விதிக்கப்படும். 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினால் 8.40% வட்டி.

தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் உயர்வு.. புதிய ரேட் இதுதான்!
சிபில் ஸ்கோர் 700க்கும் 749க்கும் இடையே இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8.20% வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினால் 8.40% வட்டி.

கடந்த இரண்டு மாதங்களில் இத்துடன் இரண்டாவது முறையாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன் விளைவாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களுக்கான வட்டியை உயர்த்துகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்