ஆப்நகரம்

LIC Policy: இந்த சூப்பர் பாலிசியில் 1 கோடி ரூபாய் கிடைக்கும்!

எல்ஐசி ஜீவன் சிரோமணி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள்.

Samayam Tamil 24 Dec 2021, 6:51 pm
இன்சூரன்ஸ் திட்டங்கள் என்று வந்துவிட்டால் எல்ஐசி நிறுவனத்தின் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. ஆகவே, எல்ஐசி திட்டங்களில் வெகுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இவ்வகையில், குறைந்த செலவிலேயே அதிக பலன்களை தரும் எல்ஐசி பாலிசியை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil LIC policy


எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சிரோமணி (Jeeven Shiromani) பாலிசி ஒரு அட்டகாசமான சேமிப்பு முதலீட்டுத் திட்டம். அதிக பலன்களை தரும் இத்திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஒரு லிமிட்டெட் பிரீமியம் மணி பேக் திட்டம்.

இத்திட்டத்தில் குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு உறுதித் தொகை கிடைக்கிறது. அதற்கு, 14 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணம் டெபாசிட் செய்ய வேண்டும். பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு சேர வேண்டிய பலன்கள் கிடைக்கும்.

வட்டியை குறைத்த ஐசிஐசிஐ வங்கி.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
பாலிசிதாரர் உயிருடன் இருந்தல் அவருக்கு சேர வேண்டிய தொகையும் செலுத்தப்படும். அத்துடன் மெச்சூரிட்டியின்போது பெரும் தொகை வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், பாலிசிகாலத்தின்போது பாலிசியின் சரண்டர் மதிப்புக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கடன் பெறுவதற்கு சில விதிமுறைகளும், நிபந்தனைகளும் உண்டு. எல்ஐசி பாலிசி கடன்களுக்கான வட்டி விகிதம் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 18.

அடுத்த செய்தி

டிரெண்டிங்