ஆப்நகரம்

LIC பாலிசிதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இந்த வாய்ப்பை விட்றாதிங்க!

காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி சிறப்பு முகாம் தொடக்கம்.

Samayam Tamil 17 Aug 2022, 2:52 pm
எல்ஐசி (LIC) இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம். இந்திய அரசின் கீழ் இயங்கும் எல்ஐசி நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்கின்றனர்.
Samayam Tamil LIC


எனினும், முறையாக குறிப்பிட்ட தேதிக்குள் பிரீமியம் செலுத்தாவிட்டால் எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிடும். இப்படி காலாவதியான பாலிசிகளை (Lapsed Policy) புதுப்பித்துக்கொள்வதற்கு சூப்பர் வாய்ப்பு வழங்குகிறது. இந்த வாய்ப்பை பாலிசிதாரர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. இதன் கீழ், அக்டோபர் 21ஆம் தேதி வரை, பாலிசிதாரர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியும்.

ஆதார் கார்டுதாரர்களுக்கு 4.8 லட்சம் ரூபாய்? மத்திய அரசு பரபரப்புத் தகவல்!
எனினும், ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே பாலிசியை புதுப்பிக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியம் செலுத்தாமல் இருந்தால், அந்த பாலிசியை சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ள முடியாது.

ULIP பாலிசிகள் தவிர இதர எல்லா பாலிசிகளையும் இந்த சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம். தாமதக் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.

1 லட்சம் ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கு தாமதக் கட்டணத்தில் 25% தள்ளுபடியும், 3 லட்சம் ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கு 25% தள்ளுபடியும், 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பிரீமியத்துக்கு 30% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நுண் காப்பீட்டு பாலிசிகளுக்கு (Micro Insurance Policies) 100% தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்