ஆப்நகரம்

ஆதாரை இணைக்கலனா ஆபத்து... பணம் கிடைக்காது!

ஆன்லைன் மூலமாக நீங்களே இதைச் செய்யலாம்...

Samayam Tamil 18 Feb 2021, 6:18 pm
அரசின் மானிய உதவிகளைப் பெறவேண்டுமானால் வங்கிக் கணக்குடன் ஆதாரைக் கட்டாயம் இணைக்க வேண்டும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil link your aadhaar with sbi account otherwise will lose money
ஆதாரை இணைக்கலனா ஆபத்து... பணம் கிடைக்காது!


ஆதார் இல்லாவிட்டால் எதுவும் இல்லை!

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசின் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெறவேண்டுமானால், உடனடியாக வங்கிக் கணக்கில் ஆதாரை இணைத்துவிடுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இணைப்பது எப்படி?

வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று உங்களது வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க முடியும். உங்களது பேங்க் பாஸ்புக் மற்றும் ஆதார் நகல் கொடுத்து அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நீங்கள் சுலபமாக இணைக்கலாம். உங்களது வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டவுடன் அதுகுறித்த தகவல் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும். உங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் நம்பரும் ஆதாரில் உள்ள மொபைல் நம்பரும் வெவ்வேறாக இருந்தால் இணைப்பதில் பிரச்சினை ஏற்படும்.

ஆன்லைன் மூலமாக இணைக்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இணையதளம் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம். https://www.sbi.co.in/ என்ற முகவரியில் சென்று link your aadhaar number என்ற வசதியின் கீழ் சென்று இணைக்கலாம்.

www.onlinesbi.com என்ற நெட் பேங்கிங் முகவரியில் My accounts என்ற வசதியில் சென்றும் நீங்கள் ஆதாரை இணைக்க முடியும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மொபைல் ஆப் மூலமாகவும் ஆதாரை உங்களால் வங்கிக் கணக்குடன் இணைக்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்