ஆப்நகரம்

Post Office Schemes: சிறந்த திட்டங்கள் - சூப்பரா சம்பாதிக்கலாம்!

தபால் அலுவலகங்கள் வழங்கும் சிறந்த நிதித் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 6 Sep 2020, 12:35 pm
தபால் துறையின் பெரும் பலமே நாடு முழுவதும் ஊடுருவியுள்ள கிளை அலுவலகங்கள்தான். இந்த அலுவலகங்களில் தபால் சேவை மட்டுமல்லாமல் நிதிச் சேவைகளையும் பெற முடியும். தபால் சேமிப்புத் திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நன்மதிப்பை பெற்றவை. தபால் துறை வழங்கும் சிறந்த திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil list of best financial schemes offered by post offices
Post Office Schemes: சிறந்த திட்டங்கள் - சூப்பரா சம்பாதிக்கலாம்!


சேமிப்புக் கணக்கு

வெறும் ரூ.500 டெபாசிட்டில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கை தொடங்கிவிடலாம். வங்கிகளைக் காட்டிலும் இதில் மினிமம் பேலன்ஸ் குறைவு. எனினும், மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும்.

சேமிப்பு டைம் டெபாசிட் கணக்கு

பணம் அல்லது காசோலையை வைத்து டைம் டெபாசிட் கணக்கு துவக்கிவிடலாம். கால வரம்பை நீட்டிக்க கூடுதலாக ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதும்.

ரெகரிங் டெபாசிட் கணக்கு

ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை போலவே இதையும் ஈசியாக தொடங்கிவிடலாம். எனினும், முதலீடு சரிபாதியாக பிரித்து ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்.

மாத வருமான கணக்கு

இந்த கணக்கில் டெபாசிட் செய்த தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம்

இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். ரூ.1 லட்சம் டெபாசிட் அல்லது ரூ.1 லட்சத்துக்கு மேலான காசோலையை வைத்து கணக்கு தொடங்க முடியும்.

PPF கணக்கு

இந்த கணக்கின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். அதன்பின் ஐந்து ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம். குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.500. ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும்.

சேமிப்பு சான்றிதழ் கணக்கு

இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். ஐந்தாண்டுகளின் நிறைவில் இது ரூ.1389.49ஆக உயரும். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப வருமானம் உயரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்