ஆப்நகரம்

எம்பிக்களுக்கு இலவச ரயில்.. மத்திய அரசுக்கு பலகோடி நஷ்டம்!

ரயில்களில் எம்.பிக்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் வசதியால் அரசுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 10:11 am
மக்களவையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு ரயில்களில் இலவசப் பயணம் செய்யும் வசதியால், கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அரசின் கருவூலத்தில் ரூ.62 கோடி சுமை ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட தகவலின்படி, கொரோனா சமயத்தில் 2020-21ஆம் ஆண்டில் இதுபோன்ற பயணங்களுக்கு சுமார் 2.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil train


பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் முதல் வகுப்பு ஏசி வகுப்பு அல்லது ரயில்வேயின் எக்சிகியூட்டிவ் வகுப்பில் இலவசப் பயணம் செய்யத் தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களது மனைவிகளும் சில நிபந்தனைகளுடன் இலவசமாக பயணம் செய்யலாம். முன்னாள் எம்.பி.க்கள் ஏசி-2 அடுக்குகளில் தங்களுடைய துணையுடன் பயணிக்கலாம். அவர்களின் பயணம் வாயிலாக அரசுக்கு எவ்வளவு செலவானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் இது தொடர்பாக தகவல்களை கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மக்களவைச் செயலகம், 2017-18 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் சிட்டிங் எம்.பி.க்களின் பயணத்திற்கு ஈடாக ரயில்வேயில் இருந்து ரூ.35.21 கோடி பில் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு இப்படியொரு வசதி.. இனி நிம்மதியா தூங்கலாம்!

அதேநேரம், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்காக ரூ.26.82 கோடி பில் பெறப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா சமயத்தில் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களும் ரயில்வே பாஸைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் பில்கள் முறையே ரூ.1.29 கோடி மற்றும் ரூ.1.18 கோடி என்று ஆர்டிஐ பதிலில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இருக்க, மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு வகை பயணிகளுக்கு அளிக்கப்பட்ட பல சலுகைகளை இந்திய ரயில்வே தடை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை நிறுத்தும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்