ஆப்நகரம்

இனி தங்கத்தில்தான் சம்பளம் கொடுப்போம்.. திடீர் முடிவெடுத்த நிறுவனம்!

பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது ஒரு நிதிச் சேவை நிறுவனம்.

Samayam Tamil 15 May 2022, 3:29 pm
அண்மைக்காலமாக பணவீக்கம் பயங்கர நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் பணவீக்கத்தை எதிர்கொள்வதற்காக பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வழங்க ஒரு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil gold


லண்டனை சேர்ந்த நிதிச் சேவைகள் நிறுவனமான டேலிமணி (TallyMoney) நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேமரான் பாரி தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளார். இது அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் சர்பிரைஸ் அறிவிப்பாக வெளியாகியுள்ளது.

டேலிமணி நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். எனவே, சோதனை அடிப்படையில் தங்கத்தில் சம்பளம் கொடுத்து பார்க்கலாம் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேமரான் பாரி தடாலடியாக முடிவெடுத்துவிட்டார்.

நகை வாங்குவோருக்கு நல்ல காலம்.. தங்கம் வாங்க தங்கமான நேரம்!
இதன்படி, விருப்பப்பட்ட ஊழியர்கள் இனி பணத்துக்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் என டேலிமணி நிறுவனம் அறிவித்துள்ளது. சொல்லப்போனால், பணத்தை விட தங்கத்தில் சம்பளம் கொடுப்பதுதான் நியாயமாக தெரிகிறது என்கிறார் கேமரான் பாரி.

பணவீக்கத்தால் விலைவாசியும், செலவுகளும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண பணத்தில் சம்பள உயர்வு வழங்குவதே நியாயமில்லை எனவும், காலம் காலமாக பணவீக்கத்தை எதிர்கொள்ளும் ஆயுதமாக தங்கம் பயன்படுவதால் தங்கத்தில் சம்பளம் கொடுப்பதே சரி என்கிறார் கேமரான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்