ஆப்நகரம்

ஆதார் கார்டு மிஸ் ஆகிடுச்சா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம்! ஆன்லைனிலேயே எளிதாக எடுத்துவிடலாம்.

Samayam Tamil 25 Dec 2021, 2:32 pm
இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆதார் கார்டு இல்லாமல் இங்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. கொரோனா ஊசி போடுவது, இறப்புச் சான்றிதழ், அரசின் நலத் திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே ஆதார் இல்லாமல் கிடைக்காது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை நீங்கள் எப்போதுமே பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
Samayam Tamil aadhaar


ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ என்ன செய்வீர்கள்?

புதிய ஆதார் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும்? யாரிடம் கேட்க வேண்டும்? எவ்வளவு செலவாகும்? எங்கெல்லாம் அலைய வேண்டும்? போன்ற பல சந்தேகங்கள் இருக்கும். உண்மையில் இதற்கு நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. எல்லாமே ஈசிதான். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக வேலையை முடித்துவிடலாம்.

ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் (UIDAI) விண்ணப்பித்தே நீங்கள் புதிய ஆதார் கார்டு வாங்கலாம்.

uidai.gov.in என்ற வெப்சைட்டில் சென்று முகப்பு பக்கத்தில் உள்ள Aadhaar Services என்று சேவையில் செல்லவும். அதில் My Aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

டிராப் டவுன் மெனுவில் உள்ள 'Retrieve Lost or Forgotten EID/UID' என்ற வசதியில் சென்று உங்களுடைய பெயர், ஆதார் எண் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மொபைல் நம்பர் பதிவிட்டவுடன் ஒரு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் உங்களுடைய UID/EID நம்பர் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.

இந்த UID/EID நம்பரை வைத்தே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.

மொபைல் நம்பரை ஆதாரில் அப்டேட் செய்வது ஈசியான ஒன்றுதான். ஆதார் சேவை மையத்திலேயே அப்டேட் செய்யலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்