ஆப்நகரம்

சிலிண்டர் இருந்தாலே 50 லட்சம் கிடைக்கும்! இப்படியொரு திட்டம் இருக்கா?

சமையல் சிலிண்டருக்கு 50 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது. அதன் முழு விவரம்...

Samayam Tamil 28 Dec 2021, 10:48 am
நம் அனைவரது வீட்டிலுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கும். விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் சலுகைகள் வழங்கப்படுக்கிறது. இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உள்ளன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெங்கும் பரவி வருகிறது.
Samayam Tamil lpg


சமையல் சிலிண்டருக்கு காப்பீடு வசதியும் உள்ளது. அது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனெனில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயமும் உள்ளது. அவை இயல்பாகவே பாதுகாப்பானவை என்றாலும், வாடிக்கையாளர்களின் கவனக் குறைவால் ஏதேனும் அசம்பாதிவிதங்கள் ஏற்படலாம். இதற்கு காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பை வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து இந்த காப்பீடு கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை காப்பீடு உள்ளது.

சிலிண்டருக்கு மானியம் இன்னும் வரலயா? காரணம் இதுதான். உடனே சரிபண்ணுங்க!
வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியை வழங்குவதற்காக முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கப்படும்போதே அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்யப்படும். பின்னாட்களில் ஏதேனும் விபத்து அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. பொருட்சேதம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை தேவைப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்