ஆப்நகரம்

வெறும் 150 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்... சூப்பர் ஆஃபர்!

டிசம்பர் 31 வரை மட்டுமே இச்சலுகை கிடைக்கும்!

Samayam Tamil 10 Dec 2020, 2:47 pm
பேடிஎம் மொபைல் ஆப்பில் சிலிண்டர் புக்கிங் செய்தால் கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் வெறும் 150 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வாங்க முடியும். இச்சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
Samayam Tamil lpg cylinder available for only 150 rupees how to get this offer
வெறும் 150 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்... சூப்பர் ஆஃபர்!


பேடிஎம் சலுகை!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த முறையை வாடிக்கையாளர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். பேடிஎம் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்புச் சலுகை வழங்குகிறது. இந்த ஆப் மூலமாக முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். இச்சலுகை டிசம்பர் 31 வரையில் மட்டுமே.

புக்கிங் செய்வது எப்படி?

பேடிஎம் ஆம் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் செயலியில் உள்ள ’Book Cylinder’ என்ற வசதியில் சென்று உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், பாரத் கேஸ், இண்டேன் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும். அதில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

இது இருந்தால்தான் கிடைக்கும்!

பேடிஎம் செயலியில் சிலிண்டர் புக்கிங் செய்யும்போது, Process கொடுப்பதற்கு முன்பாக FIRSTLPG என்ற புரோமோ கோடை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இந்த புரோமோ கோடை பதிவு செய்து முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். எனவே உடனடியாக உங்களது சிலிண்டர் முன்பதிவுக்கு பேடிஎம் செயலியைப் பயன்படுத்தி கேஷ் பேக் சலுகையைப் பெறுங்கள். கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இச்சூழலில் பேடிஎம் நிறுவனத்தின் இச்சலுகை வரவேற்பைப் பெற்றுள்ளது. சமையல் சிலிண்டர் விலை மிக அதிகமாக இருப்பதால் இதுபோன்ற கேஷ் பேக் சலுகைகளை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்