ஆப்நகரம்

மவுசு குறைந்த ஆடம்பரக் கார்கள்... விற்பனை சரிவு!

2019ஆம் ஆண்டில் உள்நாட்டு ஆடம்பரக் கார்கள் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2020, 12:54 pm
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் - டீசல் விலையேற்றம், இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலையால் மக்களிடையே தேவை குறைவு, வாகன எஞ்சின் கட்டுப்பாடுகள், எலெக்ட்ரிக் மயமாக்கலுக்கான நெருக்கடி போன்ற பல்வேறு காரணிகளால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து வருவாய் குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவைக் குறைத்து வந்தன. இந்த ஆண்டில் வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil மவுசு குறைந்த ஆடம்பரக் கார்கள் விற்பனை சரிவு


ஆடம்பரக் கார்களைப் பொறுத்தவரையில், விலை அதிகமாக இருந்தாலும் அவற்றின் விற்பனை இந்தியாவில் அதிகமாகவே இருக்கும். ஆனால், 2019ஆம் ஆண்டில் ஆடம்பரக் கார்களுக்கான விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய ஆடம்பரக் கார் நிறுவனங்களான மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி இணைந்து மொத்தம் 28,021 கார்களை 2019ஆம் ஆண்டில் விற்பனை செய்துள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்நிறுவனங்கள் 33,111 கார்களை விற்பனை செய்திருந்தன. இந்தியாவின் ஆடம்பரக் கார்களுக்கான சந்தையில் இம்மூன்று நிறுவனங்களும் இணைந்து 85 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

தங்கம் விலை: இன்னைக்கு விலை கூடிருக்கா குறைஞ்சிருக்கா?

பொருளாதார மந்தநிலை மட்டுமல்லாமல், ஆடம்பரக் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாலும் கார் விற்பனை மங்கியதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆடம்பரக் கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கார் வாங்குபவர்கள் 15 சதவீத வரி கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் ஆடம்பரக் கார்கள் வாங்குவதற்கு அளவுக்கு அதிகமாகச் செலவிடவேண்டியுருப்பதால் வாடிக்கையாளர்களிடையே கார் வாங்குவதில் தயக்கம் நிலவுகிறது. இதனால் சென்ற ஆண்டில் கார் விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

இனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்!

ஆடம்பரக் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால்தான் விற்பனை மேம்படும் என்கின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஓராண்டில் பணியிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டிலாவது ஆட்டோமொபைல் துறை சரிவிலிருந்து மீளுமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்