ஆப்நகரம்

ட்ரோனாக மாறும் ஹெலிகாப்டர்.. சென்னை நிறுவனத்தில் தோனி முதலீடு!

சென்னையை சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தோனி முதலீடு.

Samayam Tamil 6 Jun 2022, 4:31 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சென்னையுடனும், தமிழகத்துடனும் நெருக்கமான தொடர்புடையவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் என்பது மட்டுமல்லாமல், சென்னையை தனது இரண்டாவது வீடு என்கிறார் தோனி.
Samayam Tamil dhoni


இந்நிலையில், சென்னையை சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன்களை தயாரித்து வருகிறது. மேலும், வேளாண்மைக்கு தேவையான ட்ரோன் அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்பது தெளிவாகவில்லை. மேலும், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

EPFO: பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிக்க திட்டம்!
தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்தபின் பல்வேறு நிறுவனங்களில், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார்.

சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 26 நகரங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.

ட்ரோன்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்