ஆப்நகரம்

ஐடி ஊழியர்களுக்கு நல்ல காலம்.. மழையாக கொட்டும் சலுகைகள்!

திறமையான ஊழியர்களை தக்கவைக்க சம்பள உயர்வு, புரமோஷன், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை ஐடி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

Samayam Tamil 22 Jul 2022, 11:26 am
இந்திய ஐடி நிறுவனங்களில் அண்மைக்காலமாக ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், எச்.சி.எல், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இருந்து நிறைய ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
Samayam Tamil it employees


இந்நிலையில், ஊழியர்கள் வெளியேறுவதை தடுக்கவும், திறமையான ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளவும் சில முக்கிய முடிவுகளை ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ளன. இதன்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு போன்றவற்றை வழங்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தனது ஜூன் காலாண்டு விவரங்களை புதன்கிழமை வெளியிட்டடு. அதில், ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என விப்ரோ தெரிவித்துள்ளது.

GST: சுடுகாட்டுக்கும் ஜிஎஸ்டியா? மத்திய அரசு விளக்கம்!
இதுபோக பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைப்பதற்காக சம்பள உயர்வு, போனஸ் போன்றவற்றை திறமையான ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஊழியர்கள் வெளியேறும் விகிதம் (Attrition rate) டிசிஎஸ் நிறுவனத்தில் உச்சத்தில் உள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறிய விகிதம் 19.7%. விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறிய விகிதம் 23.3%. எச்.சி.எல் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறிய விகிதம் 23.8%.

அடுத்த செய்தி

டிரெண்டிங்