ஆப்நகரம்

ஒரு ரூபாய் போட்டு 2 ரூபாய் எடுக்கலாம்... பணத்தை இரட்டிப்பாக்கும் மந்திரம்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

Samayam Tamil 22 May 2021, 5:48 pm
இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா. முதலீட்டாளர்களின் பணம் இரு மடங்கு லாபம் தரும் வகையில் இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இந்த கிசான் விகாஸ் பத்ரா முதலீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. நீங்கள் இதில் இணைந்து முதலீடு செய்து பயன்பெறலாம். குறிப்பிட்ட கால அளவில் உங்களது முதலீடு இரட்டிப்பு லாபமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 10 ஆண்டு, 4 மாதங்கள். அதாவது, 124 மாதங்களில் இத்திட்டத்தில் முதலீடு செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil KVP


நீங்கள் 1,000 ரூபாய் தொடங்கி இத்திட்டத்தில் சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000, ரூ.50,000 என வெவ்வேறு மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் பத்திரங்கள் கிடைக்கின்றன. இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.9 சதவீதம். உங்களுக்கு ஆபத்தே இல்லாமல் உறுதியான பணம் கிடைக்கும் திட்டமாக இது உள்ளது. சந்தை நிலவரங்களால் இத்திட்டத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்பதால், கொரோனா காலத்தில் இதுபோன்ற உத்தரவாதம் தரும் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். எனவே இது ஒரு பாதுகாப்பான சேமிப்பாகும். வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை கிடைப்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சமாகும்.

வீட்டிலிருந்தே 50,000 ரூபாய் சம்பாதிக்க சூப்பர் வழி!!
இத்திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.4 லட்சம் வருமானம் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைவதற்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்