ஆப்நகரம்

சென்ற ஆண்டில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஃபேஸ்புக் பங்குகளை விற்பனை செய்த மார்க்!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனக்குச் சொந்தமான பங்குகளில், 100 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை கடந்த ஆண்டில் விற்பனை செய்துள்ளார்.

TNN 16 Apr 2017, 11:58 am
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனக்குச் சொந்தமான பங்குகளில், 100 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை கடந்த ஆண்டில் விற்பனை செய்துள்ளார்.
Samayam Tamil mark zuckerberg has sold more than 1 billion worth of facebook stock in the past year
சென்ற ஆண்டில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஃபேஸ்புக் பங்குகளை விற்பனை செய்த மார்க்!


ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள், நிறுவனர்கள், முதலீடுகள் உள்ளிட்ட விவரங்கள் பற்றி, அமெரிக்க பங்குச்சந்தைகள் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில்தான், மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கின் மனைவி பிரிஸிலா சான், தொழில்முனைவோர் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி வழங்கும் நிறுவனம் நடத்திவருகிறார். அதன்பேரில், மார்க் தன்வசம் உள்ள பங்குகளில் கணிசமானவற்றை விற்பனை செய்துவருகிறார்.

இதன்படி, 2016ம் ஆண்டின் முடிவில் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகளை, தன்வசம் இருந்து, சான் முதலீட்டு நிறுவனத்திற்கு மார்க் விற்பனை செய்துள்ளார். இதன்மூலமாக, அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியாதாரம் மேலும் உயர்ந்துள்ளது.

இது மட்டுமின்றி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை சராசரியாக, கடந்த 2 ஆண்டுகளாக, கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதனால், மார்க் உள்ளிட்டடோரின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Mark Zuckerberg has sold more than $1 billion worth of Facebook stock in the past year to help fund his new philanthropic investment vehicle, the Chan Zuckerberg Initiative.

அடுத்த செய்தி

டிரெண்டிங்