ஆப்நகரம்

Share Market: ராக்கெட் வேகத்தில் சென்செக்ஸ்... டாப் பங்குகள் இவைதான்!

இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2020, 7:01 pm

இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 558.22 புள்ளிகள் வளர்ந்து அசுர வேகத்தில் 38,492.95ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில் நிஃப்டி 168.75 புள்ளிகள் உயர்ந்து 11,300.55ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் பங்கு விலை 7.17% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக டிசிஎஸ் 4.69%, கொடாக் மகிந்த்ரா 4.56%, மகிந்த்ரா 4.44%, மாருதி சுஸுகி 4.06%, இண்டஸ் இண்ட் பேங்க் 4.05%, பஜாஜ் ஆட்டோ 3.45% உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் பங்கு விலை 1.84% சரிந்துள்ளது. அடுத்தபடியாக நெஸ்லே 1.41%, ஏசியன் பெயிண்ட்ஸ் 1.02%, ஓஎன்ஜிசி 0.93%, ஐடிசி 0.41% சரிந்துள்ளன.

Debt funds என்றால் என்ன? எப்படி பணம் சம்பாதிக்கலாம்?

நிஃப்டியை பொறுத்தவரை அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் பங்கு விலை 7.16% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் 4.67%, டிசிஎஸ் 4.67%, கொடாக் மகிந்த்ரா 4.65%, கிரசிம் 4.46%, மகிந்த்ரா 4.37%, ஹிண்டால்கோ 4.11%, இண்டஸ் இண்ட் பேங்க் 4.01%, மாருதி சுஸுகி 3.96% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக பார்தி இன்ஃப்ராடெல் பங்கு விலை 1.93% சரிந்துள்ளது. அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.79%, நெஸ்லே இந்தியா 1.47%, ஓஎன்ஜிசி 1.11%, ஏசியன் பெயிண்ட்ஸ் 1.04%, ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் 0.69% சரிந்துள்ளன.

IRCTC: இலவச ரயில் டிக்கெட்&ஆஃபர்களை அள்ளுவது எப்படி?

ஜூன் காலாண்டில் இண்டஸ் இண்ட் பேங்கின் நிகர லாபம் 68% வளர்ச்சியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதன் பங்கு 4.05% வளர்ச்சியை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹாட் பங்காக அல்ட்ராடெக் சிமெண்ட் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்