ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் ஊசலாட்டம்

இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஊசலாட்டத்துடன் முடித்துள்ளன.

TNN 13 Jul 2016, 5:46 pm
இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஊசலாட்டத்துடன் முடித்துள்ளன.
Samayam Tamil markets have a tepid closing nifty holds 8500 q1 earnings in focus
பங்குச்சந்தைகளில் ஊசலாட்டம்


உள்நாட்டில் முன்னணி நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாக உள்ளன. முதல்கட்டமாக, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் இவ்வாரத்தில் வெளியிடப்படுகிறது. இதன் செயல்பாடுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இருந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகம் தொடக்கம் முதல் இறுதி வரை, ஏற்ற, இறக்கம் கலந்தே இருந்தன. முந்தைய நாள் உயர்வை பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் விலை அதிகரித்திருந்த பங்குகளை விற்று, லாபத்தை பதிவு செய்தனர்.

இதனால், பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஊசலாட்டத்துடனே நீடித்தது. உலோகம் மற்றும் சுரங்கத்துறை பங்குகள் அதிகளவில் விலை அதிகரித்தன. அதேசமயம், வாகனம், ஐடி துறை பங்குகள் விலை குறைந்தும் இருந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 7 புள்ளிகள் அதிகரித்து, 27,815 புள்ளிகளாக நிலைபெற்றது. எனினும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து, 8,519 புள்ளிகளாகவும் முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்