ஆப்நகரம்

சிறப்பான புள்ளிகளை குவித்த பங்குச்சந்தை: மோடியின் வெற்றியை தொடர்ந்து ஏறுமுகம்!

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

Samayam Tamil 24 May 2019, 4:46 pm
மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்தது.
Samayam Tamil Sensex


முதல்முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தாண்டியது. வர்த்தகத்திற்கு இடையில் சென்செக்ஸ் 946 புள்ளிகள் அதிகரித்து, 40,056.58 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் நிஃப்டி 12,000 புள்ளிகளைத் தொட்டது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், சென்செக்ஸ் 348.76 புள்ளிகள் உயர்ந்து, 39,160.15 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 114.40 புள்ளிகள் அதிகரித்து, 11,771.40 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐஓசி, ஹெச்.பி.சி.எல், பிபிசிஎல், யெஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஆர்.ஐ.எல், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் பெரிய அளவில் லாபம் ஈட்டின.

அதேசமயம் ஓ.என்.ஜி.சி, பாரதி இன்ஃப்ராடெல், பஜாஜ் ஆட்டோ, டெக் மகிந்திரா, ஹெச்.சி.எல் டெக் ஆகியவற்றின் பங்குகள் சரிவைக் கண்டன. இதற்கிடையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

நேர்மறை முடிவு:
சென்செக்ஸ் இன்று 623.33 புள்ளிகள் உயர்ந்து 39434.72 புள்ளிகளுடனும், நிஃப்டி 187.05 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்