ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் சரிவு

சர்வதேச சந்தை காரணங்களால், வியாழக்கிழமை முடிவடைந்த பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன.

TOI Contributor 10 Mar 2016, 4:35 pm
சர்வதேச சந்தை காரணங்களால், வியாழக்கிழமை முடிவடைந்த பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன.
Samayam Tamil markets take a breather on weak global cues sensex falls 171 points
பங்குச்சந்தைகளில் சரிவு


ஆசிய பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்துடன் இருந்தன. குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 2% சரிவடைந்து முடிந்தது. இந்நிலையில், இந்திய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின.

வர்த்தகத்தின் இடையே, சுரங்க உற்பத்தி குறித்த புதிய மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக, தகவல் வெளியானது. மேலும், இயற்கை வளங்கள்,எரிபொருள் உற்பத்தி தொடர்பாகப் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.

இதன்காரணமாக, உலோகம்,எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை சார்ந்த பங்குகளை விற்று, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தனர். இதனால், சந்தைகளிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை சரிந்து காணப்பட்டன. பிற்பகலில் தொடங்கிய ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருந்ததால், இந்திய சந்தைகளின் சரிவு வர்த்தகம் முடியும் வரை நீடித்தது.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 171 புள்ளிகள் குறைந்து, 24,623 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 46 புள்ளிகள் சரிந்து, 7,486 புள்ளிகளாக, முடிவுற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்