ஆப்நகரம்

கொரோனா: மாருதி சுஸுகியின் புதிய முயற்சி!

வாடிக்கையாளர்களைக் கொரோனாவிலிருந்து பாதுகாக்க புதிய வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 5:21 pm
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாகன விற்பனை முற்றிலும் முடங்கியது. உற்பத்தி ஆலை, விற்பனை மையம் உள்ளிட்ட அனைத்தும் இழுத்து மூடப்பட்டதால் மாருதி சுஸுகி நிறுவனத்துக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
Samayam Tamil maruti


மாருதி சுஸுகி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையுமே ஆட்டம் கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த சூழலில் தற்போது கொரோனா பாதிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில் வாகன விற்பனையை மீண்டும் உயர்த்தும் முயற்சியில் மாருதி சுஸுகி நிறுவனமும் இதர நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவை வாட்டும் கொரோனா... 3 கோடிப் பேருக்கு வேலை இல்லை!

வாகன விற்பனையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் தனது வாடிக்கையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க புதிய திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அதாவது மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் கொரோனா பாதிப்பில் சிக்காமல் இருக்க முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. முகக் கவசம் கையுறை உள்ளிட்ட இந்த உபகரணங்கள் ரூ.10 முதல் ரூ.650 வரையில் கிடைக்கும் எனவும், இவற்றை அருகில் உள்ள மாருதி சுஸுகி ஷோரூம்களிலோ அல்லது ஆன்லைன் தளத்தின் தளத்தின் மூலம் விண்ணப்பித்தோ பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு வாகன விற்பனையை உயர்த்தும் முயற்சியிலும் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்