ஆப்நகரம்

கார் விற்பனை வீழ்ச்சி: கொரோனா காரணமா?

மார்ச் மாதத்துக்கான வாகன விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் 47 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Samayam Tamil 1 Apr 2020, 6:08 pm
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மார்ச் மாதத்துக்கான தனது வாகன விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மொத்தம் 83,792 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2019 மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 1,58,076 கார்களை விட 47 சதவீதம் குறைவாகும். உற்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரையில், 46.4 சதவீத வீழ்ச்சியுடன் 79,080 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாதத்தில் இதன் எண்ணிக்கை 1,47,613 ஆக இருந்தது.
Samayam Tamil மாருதி சுஸுகி கார்


ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களுக்கான விற்பனை எண்ணிக்கை 16,826லிருந்து 15,988 ஆகக் குறைந்துள்ளது. காம்பாக்ட் பிரிவில், ஸ்விஃப்ட், செலரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 50.9 சதவீதம் குறைந்து 40,519 ஆக இருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் இப்பிரிவில் மொத்தம் 82,532 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

நடத்தர சேடான் பிரிவில் சியாஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 3,672லிருந்து 1,863 அகக் குறைந்துள்ளது. பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், விடெரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா ஆகிய கார்களுக்கான விற்பனை எண்ணிக்கை 53.4 சதவீதம் குறைந்து 11,904 ஆக இருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் மொத்தம் 25,563 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

கொரோனா பாதிப்பு: கைகொடுக்கும் விப்ரோ நிறுவனம்!

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2020 மார்ச் மாதத்தில் 55 சதவீத சரிவுடன் 4,712 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் பரவலாக இருக்கிறது. இதனால் மக்களிடையே கார்களுக்கான தேவை குறைந்துள்ளதால், உள்நாட்டு விற்பனையும், ஏற்றுமதியும் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்