ஆப்நகரம்

கார் வாங்க ஆசையா? அப்போ உங்களுக்கு சூப்பர் ஐடியா!!

ஈசியாக கார் வாங்குவதற்கான ஸ்மார்ட் பைனான்ஸ் செர்வீஸ் திட்டத்தை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2020, 12:31 pm

கார் வாங்க விரும்புவோருக்கு எளிமையான பைனான்ஸ் வழிகளை உருவாக்குவதற்காக மாருதி சுசுகி நிறுவனம் ஸ்மார்ட் பைனான்ஸ் செர்வீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil Car


கார் வாங்க தேவையான பைனான்ஸ் சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இத்திட்டம் உதவும் என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் வாங்குவதற்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் பற்றி விளக்கி, வாடிக்கையாளர் தனக்கு சரியான சாய்ஸை தேர்வு செய்ய இந்த ஸ்மார்ட் பைனான்ஸ் செர்வீஸ் உதவுகிறது.

கார் கடன், கடன் பார்ட்னர், கடன் காலம் போன்றவற்றை தேர்வு செய்ய இத்திட்டம் உதவுகிறது. தற்போதைய சூழலில் இந்த சேவை நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக அரீனா வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

ஆதார்-பான் கார்டு ஈசியா இணைக்கலாம்: ஒரு SMS போதும்!

இதை எப்படி பயன்படுத்துவது? நெக்ஸா இணையதளத்தில் உங்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்து கடன் பெற்றுக்கொள்ளலாம். பல்வேறு பைனான்ஸ் நிறுவனங்களும், வங்கிகளும் வழங்கும் கடன் தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இச்சேவையை பயன்படுத்த இந்த லிங்கை கிளிக் செய்யவும். பைனான்ஸ் பார்ட்னர், சிறந்த கடன் திட்டம், பைனான்ஸ் சம்பந்தமான செயல்முறைகள், கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனிலேயே கடனுக்கு விண்ணப்பித்து, டிஜிட்டல் ஆவணங்களை பகிர்ந்துகொள்ளலாம். இத்திட்டத்திற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, சோழமண்டலம் பைனான்ஸ், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கொடாக் மகிந்த்ரா வங்கி, மகிந்த்ரா பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் மாருதி சுசுகி கூட்டணி அமைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்