ஆப்நகரம்

வருகிறது மாருதி சுசுகி ஸ்விப்ட் டிகா

பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுவகையான கார்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

TNN 30 Aug 2016, 8:00 pm
சென்னை : பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுவகையான கார்களை அறிமுகம் செய்வது வழக்கம்.
Samayam Tamil maruti suzuki launches swift deca
வருகிறது மாருதி சுசுகி ஸ்விப்ட் டிகா


மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நேற்று (திங்கள் கிழமை) ஸ்விப்ட் டிகா என்ற புதுவகை மாதிரி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சம் தலை சாய்க்கும் வசதி. இந்த VXi மாடல் கார் விலை ரூ. 5,94,445 என்றும், இதன் VDi மாடல் கார் ரூ 6,86,983 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களில் தொடுதிரை ம்யூசிக் மல்டிமீடியா சிஸ்டம் வசதியுடன் கூடிய புளூடூத், கால்பந்து உருவங்கள் பொரித்த சீட், அழகிய உள்ளமைப்பு, வெளிப்புற அமைப்புகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என தெரிவித்துள்ளனர்.

ஸ்விப்ட் டிகா கார் சிறந்த செயல்பாட்டினால் புகழ் பெற்றது. இந்த கார்கள் அடர் சிகப்பு மற்றும் முத்து வெள்ளை நிறங்களில் இரு நிறங்களில் வெளிவந்துள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள குறிப்பிட்ட பதிப்பு கார்கள் ரூ. 18 ஆயிரம் வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்