ஆப்நகரம்

கார் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை உயர்த்திய மாருதி சுஸுகி!

புதிதாக கார் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சில கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 Apr 2024, 10:06 am
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாகனங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை நேற்று முதல், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
Samayam Tamil car price


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. எனவே இந்தக் கார்களை நீங்கள் வாங்குவதாக இருந்தால் இனி அதிகம் செலவாகும். கிராண்ட் விட்டாரா காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. கிராண்ட் விட்டாரா சிக்மா காரின் விலை 19,000 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.25,000 உயர்ந்துள்ளது.

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், கிளீயரன்ஸ் சேல் போன்ற சலுகைகள் மூலமாகக் குறைந்த விலைக்கு கார் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது. முக்கியமான மாடல்களின் விலை உயர்ந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, வேறு கார்களை வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது மானேசர் கார் உற்பத்தி ஆலையில்ல் மற்றொரு வாகன அசெம்பிளி லைனைத் தொடங்கியுள்ளது. இந்த அசெம்பிளி லைன் மானேசரில் உள்ள 3 உற்பத்தி ஆலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வாகன அசெம்பிளியின் தொடக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 100,000 யூனிட்களை உற்பத்தி செய்யும். இந்த அசெம்பிளி லைனைச் சேர்ப்பதன் மூலம் மானேசர் ஆலையின் மொத்த உற்பத்தி திறன் இப்போது ஆண்டுதோறும் 9,00,000 வாகனங்கள் என்ற அளவை எட்டியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்