ஆப்நகரம்

Microsoft: இனி வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Oct 2020, 6:03 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட கால அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில நாடுகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும் வருகிறது. ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டிய கட்டுப்பாட்டால் அலுவலகப் பணிகளும் தொழில் துறைப் பணிகளும் முடங்கின. இருந்தாலும் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் வசதியும் அதற்கான தேவையும் இருந்த நிறுவனங்களும் பணியாளர்களும் அதைக் கடைபிடித்து வருகின்றனர். எதிர்காலத்திலும் வீட்டில் இருந்தே வேலைபார்க்கும் நடைமுறையைக் கடைபிடிக்கும் முடிவுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் வந்துள்ளன.
Samayam Tamil WFH


வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதாகவும், செலவுகள் குறைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சீட்டில் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம் புதிய பணிச்சூழல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் அனைவரும் தங்களது வேலை நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் வீட்டிலிருந்தே வேலைபார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.6,000 நிதியுதவி வேணுமா? இதை உடனே பண்ணுங்க!

அதேபோல, மேனேஜர் பிரிவு பணியாளர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம், பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த வழிமுறைகள் தங்களது பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான கத்லீன் ஹோகன் கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்குப் பிறகு பணிச்சூழல் எவ்வாறு மாற்றமடைந்து வருகிறது எனவும், பணியாளர்களின் திறன் மேம்பாடு, கற்கும் திறன் போன்றவை எவ்வாறு உள்ளன என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்