ஆப்நகரம்

பால், இறைச்சி விலை உயரும் அபாயம்.. காரணம் இதுதான்!

தீவனங்களின் விலை உயர்வால் பால் மற்றும் இறைச்சி விலை மேலும் உயரக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

Samayam Tamil 5 Oct 2022, 11:14 am
மாடுகளுக்கான தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பால் மற்றும் இறைச்சி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. தீவனங்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பால் விலையை விவசாயிகள் உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil milk meat


இந்தியாவில் மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த ஒன்பது ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதே தீவனங்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீவனங்களின் மொத்த விஐ பணவீக்கம் 25.54% என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த ஒன்பது ஆண்டுகால உச்சமாகும்.

பயப்பட்றியா குமாரு.. ட்விட்டர் டீலுக்கு ஓகே சொன்ன எலான் மஸ்க்
கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவனத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சி விலை நேரடியாக உயருகிறது. மழை காரணமாக பயிர் சேதம் மட்டுமல்லாமல் வடமாநிலங்களில் வைக்கோல் எரிப்பு காரணமாகவும் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது.

எள்ளு புண்ணாக்கு விலை இருமடங்கு அதிகரித்து குவிண்டாலுக்கு சுமார் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பச்சை தீவனங்களின் விலையும் உயர்ந்துவிட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். கோதுமை வைக்கோல் விலை குவிண்டால் சுமார் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ 5 முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வைக்கோல் தற்போது 15 முதல் 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சி விலையும் உயர்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பால், இறைச்சி விலை மேலும் உயரும். இதனால் குடும்பங்களுக்கு செலவும், சுமையும் அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்