ஆப்நகரம்

பயப்படாதீங்க, பால் விலை உயராது!

அடுத்த ஒரு வருடத்துக்கு பால் விலை உயர்த்தப்படாது என்று பால் உற்பத்தித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 17 Oct 2019, 6:23 pm
பால் உற்பத்தித் துறையில் தொழிலாளர் கூலி உயர்வு, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்ற ஆண்டில் பால் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களில் மட்டும் பால் விலை லிட்டருக்கு 5 முதல் 8 ரூபாய் வரையில் அதிகரித்திருந்தது.
Samayam Tamil பயப்படாதீங்க பால் விலை உயராது


இந்த ஆண்டில் போதிய மழை இல்லாததால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு அதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. சென்ற ஆண்டை விட 6 சதவிகிதம் குறைவான அளவில்தான் பால் உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

”குறை கூறுவதை விட்டுவிட்டு செயலில் இறங்குங்கள்”: மோடி அரசைத் தாக்கும் மன்மோகன் சிங்

2015-16ஆம் ஆண்டில் 155.5 மில்லியன் டன், 2016-17ஆம் ஆண்டில் 165.4 மில்லியன் டன், 2017-18ஆம் ஆண்டில் 176.3 மில்லியன் டன் என்ற அளவில் பால் உற்பத்தி இருந்தது. இந்த ஆண்டில் உற்பத்தி குறையும் என்றாலும், பால் விலையில் உயர்வு இருக்காது என்று கிரீம்லைன் பால் உற்பத்தி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ராஜ் கன்வார் தெரிவித்துள்ளார்.

வீட்டுகே வரும் வங்கி சேவைகள்: பொதுத்துறை வங்கிகள் தயார்

நகரமயமாதல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் பால் உற்பத்தித் துறை 6 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரீம்லைன் பால் உற்பத்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கோத்ரெஜ் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் கைப்பற்றியது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பால் உற்பத்திச் சந்தையின் பெரும்பாலான பங்குகளை கோத்ரெஜ் தனதாக்கியுள்ளது.

புழக்கத்தில் இருக்கும் பணம் எவ்வளவு?

இந்நிறுவனத்துக்கு 10 உற்பத்தி ஆலைகளும், 100 குளிர்பதனக் கிடங்குகளும் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 13.6 லட்சம் லிட்டர் பாலை இந்நிறுவனம் பதப்படுத்துகிறது. விசாகப்பட்டினத்தில் பதப்படுத்தும் ஆலை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ் கன்வார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்