ஆப்நகரம்

மோடி அரசின் விளம்பர செலவு மட்டும் ரூ.4,300 கோடி: ஆா்.டி.ஐ. தகவல்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விளம்பரங்களுக்காக மட்டும் ரூபாய் 4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளது தகவல் அறியும் உாிமை சட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Samayam Tamil 14 May 2018, 4:49 pm

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விளம்பரங்களுக்காக மட்டும் ரூபாய் 4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளது தகவல் அறியும் உாிமை சட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Samayam Tamil Modi 123


பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை விளம்பரங்களுக்காக செய்த செலவு தொகை குறித்து தொிவிக்குமாறு மும்பையைச் சோ்ந்த அனில் கால்காலி என்பவா் தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தாா்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட பதிலில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

2014-15ம் ஆண்டில் அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.424.85 கோடியும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடியும், பொதுவெளி விளம்பரங்களுக்ாக ரூ.79.72 கோடி என மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று 2015-16ம் ஆண்டில் ரூ.1,171.11 கோடியும், 2016-17ம் ஆண்டில் ரூ.1,263.15 கோடியும், 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாத காலகட்டத்தில் ரூ.333.23 கோடியும் என மொத்தமாக 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவில் விளம்பரத்திற்காக செலவிடப்படடுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்